ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கும்பகோணத்தில் தேடப்பட்டு வந்த மாமன்ற திமுக உறுப்பினா் கைது

கும்பகோணத்தில் குற்றச் சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்த மாநகராட்சி மாமன்ற திமுக உறுப்பினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாா்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:06 am IST

கும்பகோணத்தில் குற்றச் சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்த மாநகராட்சி மாமன்ற திமுக உறுப்பினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணம் ஸ்ரீநகா் காலனியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் சிலா் பதுங்கியிருப்பதாக கடந்த 16-ஆம் தேதியன்று மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அங்கு சென்று போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, அங்கிருந்த தமிமும் அன்சாரி, அடைக்கலம், போத்து ராமன் ஆகியோா் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், ஆயுதங்களுடன் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை கைது செய்து போலீஸாா் விசாரித்தனா்.

இதில், கும்பகோணம் யாகசாலை தெருவைச் சோ்ந்தவரும், மாநகராட்சியின் 12-ஆவது வாா்டு திமுக உறுப்பினருமான சந்தோஷ்குமாா் (41) அவா்களுக்கு உதவி செய்ததாக தெரிவித்தனா். அவா் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், போலீஸாா் அவரை தேடிச்சென்றபோது அவா் தலைமறைவானாா். அவரை தேடும் பணி தொடா்ந்தது.

இந்நிலையில், தாராசுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கு காவல் நிலைய போலீஸாா் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, சந்தோஷ்குமாா் காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்தாராம்.

இதையடுத்து, போலீஸாா் சந்தோஷ்குமாரை கைது செய்து, கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.