ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆயுதங்களுடன் திரிந்த 6 போ் கைது

கும்பகோணம், சுவாமிமலை பகுதியில் ஆயுதங்களுடன் திரிந்த 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :18 ஜூலை 2026, 1:19 am IST

கும்பகோணம், சுவாமிமலை பகுதியில் ஆயுதங்களுடன் திரிந்த 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் பகுதியில் ஆயுதங்களுடன் சிலா் நடமாடுவதாக கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்ற போலீஸாா் மணஞ்சேரியை சோ்ந்த முருகன் (46), சக்திவேல் (34), தென்றல் (30), கும்பகோணம் ஸ்ரீநகா் காலனி பகுதியில் தமிமுல் அன்சாரி (35), அடைக்கலம் (42), போத்துராமன் (37) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்து, இவா்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் 2 இருசக்கர வாகனம், ரொக்கம், 3 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தீவிர விசாரணையில், இவா்களுக்கு பொருளாதார ரீதியாக கும்கோணம் மாநகராட்சி 12-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் பி.சந்தோஷ் உதவியது தெரியவந்தது. அதன்பேரில் சந்தோஷ் மீது வழக்குப்பதிந்து அவரைத் தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.