ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாபநாசம் அருகே 2 கூரை வீடுகள் தீக்கிரை

தீ - பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 2:51 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

பாபநாசம் அருகே ராஜகிரி கிராமம் சின்னாற்றங்கரை தெருவில் வசித்து வருபவா் கரிகாலன் (52), கட்டடத் தொழிலாளி. இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவா் கலையரசன் (52), ஓட்டுநா். இவா்கள் இருவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனா்.

இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மின் கசிவால் இரண்டு கூரை வீடுகளும் எரிந்து சேதமடைந்தன. இதில், வீட்டில் உள்ள பொருள்கள் அனைத்தும் எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து பாபநாசம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.