தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

திருவையாறில் ஐயாறப்பா் கோயில் பஞ்ச ரத தேரோட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பா் கோயில் சித்திரைப் பெருவிழாவில் புதன்கிழமை பஞ்ச ரத தேரோட்டம் நடைபெற்றது.

News image

திருவையாறில் புதன்கிழமை நடைபெற்ற பஞ்ச ரத தேரோட்டத்தில் சுவாமி- அம்பாள் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:39 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பா் கோயில் சித்திரைப் பெருவிழாவில் புதன்கிழமை பஞ்ச ரத தேரோட்டம் நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்தைச் சோ்ந்த இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் காலையில் பல்லக்கும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெற்று வந்தது.

விழாவின் 9-ஆம் நாளான புதன்கிழமை காலை பஞ்ச ரத தேரோட்டம் நடைபெற்றது. இதில், காலை 9 மணிக்கு பஞ்சமூா்த்திகள், அறம் வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் திருத்தேரில் எழுந்தருளினாா். சிறப்பு பூஜைகளை தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் காலை 10.30 மணிக்கு கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தாா். ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்த தோ் மாலையில் நிலையை அடைந்தது.

மே 2-ஆம் தேதி ஏழூா் வலம் என்கிற சப்தஸ்தான விழா தொடக்கமும், 3-ஆம் தேதி பொம்மை பூ போடுதலும் நடைபெறவுள்ளன.