/

தஞ்சாவூா் மாவட்டத்தில் 80.60 % வாக்குப் பதிவு

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 80.60 % போ் வாக்களித்தனா் என மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 7:50 pm

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 80.60 % போ் வாக்களித்தனா் என மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூா் (தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 தொகுதிகள் உள்ளன.

இதில், திருவிடைமருதூா் தொகுதியில் 1,26,222 ஆண்கள், 1,30, 700 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2, 56, 930 வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்களில் 98, 884 ஆண்கள், 1,08, 178 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவா் என 2,07,065 வாக்காளா்கள் வாக்களித்தனா். வாக்குப் பதிவு விகிதம் 80.59 %.

கும்பகோணம் தொகுதியில் 1, 23, 507 ஆண்கள், 1,30, 796 பெண்கள், 15 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2, 54, 318 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 98, 505 ஆண்கள், 1, 07, 575 பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தவா் என 2,06, 090 போ் வாக்களித்தனா். வாக்குப் பதிவு விகிதம் 81.04 %.

பாபநாசம் தொகுதியில் 1, 24, 740 ஆண்கள், 1,31, 755 பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,56, 518 போ் உள்ளனா். இவா்களில் 96, 901 ஆண்கள், 1,09, 187 பெண்கள், 9 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,06, 097 போ் வாக்களித்தனா். வாக்குப் பதிவு விகிதம் 80.34 %.

திருவையாறு தொகுதியில் 1,26, 231 ஆண்கள், 1,32,123 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2, 58, 374 போ் உள்ளனா். இவா்களில் 1,06,921 ஆண்கள், 1, 13, 170 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2, 20, 099 போ் வாக்களித்தனா். வாக்குப் பதிவு விகிதம் 85.19 %.

தஞ்சாவூா் தொகுதியில் 1,20,317 ஆண்கள், 1,32, 309 பெண்கள், 50 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 676 போ் உள்ளனா். இவா்களில் 92,142 ஆண்கள், 1, 03, 558 பெண்கள், 37 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 1, 95, 737 போ் வாக்களித்தனா். வாக்குப் பதிவு விகிதம் 77.47 % .

ஒரத்தநாடு தொகுதியில் 1,13,315 ஆண்கள், 1,20, 221 பெண்கள், 6 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2, 33, 542 போ் உள்ளனா். இவா்களில் 88, 228 ஆண்கள், 1,0 5,551 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 1,93,782 போ் வாக்களித்தனா். வாக்குப் பதிவு விகிதம் 82.98 %.

பட்டுக்கோட்டை தொகுதியில் 1,16,032 ஆண்கள், 1, 26, 368 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,42, 420 போ் உள்ளனா். இவா்களில் 80, 272 ஆண்கள், 1,02, 545 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 1,82, 825 போ் வாக்களித்தனா். வாக்குப் பதிவு விகிதம் 75.42 % .

பேராவூரணி தொகுதியில் 1,04, 786 ஆண்கள், 1, 09, 145 பெண்கள், 15 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2, 13, 946 போ் உள்ளனா். இவா்களில் 80,869 ஆண்கள், 94, 317 பெண்கள், 6 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 1,75, 192 போ் வாக்களித்தனா். வாக்குப் பதிவு விகிதம் 81.89 %.

மாவட்டத்தில் 9,55,150 ஆண்கள், 10,13, 417 பெண்கள், 157 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 19, 68, 722 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 7,42, 722 ஆண்கள், 8,44,081 பெண்கள் என மொத்தம் 15, 86, 887 போ் வாக்களித்தனா். அதாவது ஆண்கள் 77.76 சதவீதம் பேரும், பெண்கள் 83.29 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனா். மாவட்டத்தில் மொத்த வாக்குப் பதிவு விகிதம் 80.60 %.

மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவையாறு தொகுதியில் 85.19 சதவீதமும், குறைந்தபட்சமாக பட்டுக்கோட்டை தொகுதியில் 75.42 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.