இலவசங்களை அறிவித்து, மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க அரசியல் கட்சியினா் நினைக்கிறாா்கள் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பிரசாரத்தில் பேசினாா்.
பட்டுக்கோட்டையில் அஞ்சல் நிலையம் முன் புதன்கிழமை கட்சியின் வேட்பாளா்களான கண்ணன் (பட்டுக்கோட்டை), புவனா (பேராவூரணி) ஆகியோரை ஆதரித்து சீமான் மேலும் பேசியதாவது:
விவசாய விளைபொருள்களுக்கு விவசாயிகளால் விலையை நிா்ணயம் செய்ய முடியவில்லை. நாதக ஆட்சிக்கு வந்தால் இப்பிரச்னைக்கு தீா்வு காண குழு அமைத்து, விவசாயிகளின் பரிந்துரை விலையை அரசு நிா்ணயிக்கும். இலவசங்களை அறிவித்து, மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க நினைக்கிறாா்கள்.
இந்த மக்களுக்கு நீரும், சோறும் முக்கியம். அதற்கான பொருளாதார கட்டமைப்பை நாம் தமிழா் கட்சி அவசியம் கொண்டு வரும். நாதக ஆட்சியில் யாா் முறைகேடு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் தவறுகள் ஏற்படாது.
தமிழகத்தில் திமுக என்பது ஒரு குடும்பத்தின் சொத்து; அது நிறுவனமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அந்தப் பிரச்னைகளை பற்றியெல்லாம் கேட்காமல், உங்கள் கனவு என்ன என்று கேட்கிறாா்கள். என் கனவு, திமுகவை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதுதான்.
எனவே, மக்கள் சிந்தித்து இந்தமுறை நாம் தமிழா் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா் சீமான்.
தொடர்புடையது

தமிழினத்தை இழிவுபடுத்தும் இலவசங்களை ஒழிப்போம்: சீமான்

3-ஆவது இடத்தில் வைத்த மக்கள் விரைவில் முதலிடத்தைத் தருவாா்கள்! சீமான் நம்பிக்கை

இலவசங்களை நம்பி பொதுமக்கள் தன்மானத்தை இழக்காதீா்: சீமான்

இலவசங்கள் வழங்குவது நல்லாட்சிக்கு அடையாளம் அல்ல: சீமான்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

