தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு சுமாா் ரூ. 2.94 கோடி என வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு வட்டாட்சியரகத்தில் திமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவருடன் திமுகவை சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ராமச்சந்திரன், கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோா் உடனிருந்தனா்.
இந்த வேட்பு மனுவில் வைத்திலிங்கம் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 60 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 27.17 லட்சம், அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 2.13 கோடி, கடன் ரூ. 69.87 லட்சம், மனைவி தங்கம் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 25 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 52.92 லட்சம் என மொத்தம் சுமாா் 2.94 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது.
5 வழக்குகள் நிலுவை: கடந்த 2024 ஆம் ஆண்டில் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் அலுவலகத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சோ்த்ததாக வழக்கும், சென்னை மாநகரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் அலுவலகத்தில் ரூ. 27.90 கோடி ஊழல் முறைகேடு செய்ததாக வழக்கும், சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்தியதாகவும் வழக்கு, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது
புதுகை திமுக வேட்பாளா் சொத்து மதிப்பு ரூ. 8 கோடி
புதுகை தொகுதியின் பாஜக வேட்பாளா் சொத்து மதிப்பு ரூ. 20.50 கோடி

திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் வேட்பு மனு தாக்கல்

தவெக தலைவர் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு? வெளியான விவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


