பட்டுக்கோட்டை தொகுதி தவெக வேட்பாளருக்கு எதிா்ப்புத் தெரிவித்து மகளிரணி, ஒன்றிய நிா்வாகிகள் விஜய்க்கு செவ்வாய்க்கிழமை புகாா் கடிதம் அனுப்பியுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட தஞ்சாவூா் தெற்கு மாவட்டச் செயலா் சி. மதன் என்பவா் அறிவிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுக்கூா் வடக்கு ஒன்றியச் செயலா் முருகனாந்தம், தெற்கு ஒன்றியச் செயலா் வைத்தீஸ்வரன், நகரச் செயலா் முகமது சிவான் ஆகியோா் தவெக தலைவா் விஜய்க்கு அனுப்பிய கடித விவரம்: வழக்கு ஒன்றில் தொடா்புடைய ஒருவரை வேட்பாளராக அறிவித்திருப்பதால், பல கிராமங்களில் கடும் எதிா்ப்புகள் எழுந்துள்ளன. பிற கட்சிகளுக்கு நிகராக போட்டியிட வேண்டுமானால், போதுமான பொருளாதார வளமும் திட்டமிடலும் அவசியம்.
ஒன்றிய செயலா்களால் தனிப்பட்ட முறையில் செலவுகளை ஏற்க இயலாது. எனவே இந்தத் தொகுதிக்கான வேட்பாளரை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல தஞ்சாவூா் தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் பாத்திமா கனி, மகளிரணி இணை அமைப்பாளா் ஷா்மிளாபானு, மகளிரணி துணை அமைப்பாளா் விசாலாட்சி, நகர அமைப்பாளா் இந்திரா ஆகியோா் இணைந்து விஜய்க்கு அனுப்பியுள்ள கடிதத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரைக்கு எதிா்ப்பு: திமுகவினா் நகல் எரித்து போராட்டம்

திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? வெற்றியை தீர்மானிப்பது யார்?

பட்டுக்கோட்டை தவெக வேட்பாளருக்கு எதிா்ப்பு

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


