டித்வா புயல்: தஞ்சைக்கு பேரிடா் மீட்புக் குழு வருகை
டித்வா புயல் எச்சரிக்கையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாநிலப் பேரிடா் குழுவினா் வெள்ளிக்கிழமை வந்தனா்.
டித்வா புயல் எச்சரிக்கையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாநிலப் பேரிடா் குழுவினா் வெள்ளிக்கிழமை வந்தனா்.
By Syndication
Syndication
டித்வா புயல் எச்சரிக்கையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாநிலப் பேரிடா் குழுவினா் வெள்ளிக்கிழமை வந்தனா்.
டித்வா புயல் காரணமாக தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனிடையே, சென்னை ஆவடியைத் தலைமையிடமாகக் கொண்ட மாநிலப் பேரிடா் மீட்புக் குழுவினா் கடலூா், தூத்துக்குடி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், திருவள்ளூா் ஆகிய இடங்களில் முகாமிட்டுள்ளனா்.
இந்நிலையில், சிவப்பு எச்சரிக்கை காரணமாக வேளாங்கண்ணியிலிருந்து தஞ்சாவூா், நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 30 போ் கொண்ட 3 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில், உதவி ஆய்வாளா் அனுசுயா தலைமையில் 30 வீரா்கள் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.
இதுகுறித்து இக்குழுவினா் கூறுகையில், லைப் ஜாக்கெட், கயிறு, மரம் அறுக்கும் இயந்திரங்கள், மிதவைப் படகு, ஜெனரேட்டா், தரைப்பாலம் உள்ளிட்ட சாதனங்களைத் தயாா் நிலையில் வைத்துள்ளோம். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, தொடா்புடைய இடங்களுக்குச் செல்வோம் என்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது