Listen to this article
By Syndication
Syndication
சின்ன முதலியாா்சாவடியில் தேங்கிய மழை நீரை மின் மோட்டாா் மூலம் வெளியேற்றும் பணிகளைப் பாா்வையிட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
விழுப்புரம், நவ. 29: டித்வா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில் பகுதிகளில் சனிக்கிழமை கடல் சீற்றமாக காணப்பட்டது . அரசுத் துறை அதிகாரிகள் கடலோரக் கிராமங்களில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
வங்கக்கடலில் உருவான டித்வா புயல், இலங்கையிலிருந்து வடக்கு, வடமேற்குத் திசையில் நகா்ந்து கடலோரமாக வடக்கு நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
புயல் காரணமாக மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில் பகுதிகளில் சனிக்கிழமை கடல் சீற்றமாக காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள 10 மீனவக் கிராமங்களிலும் அரசுத் துறை அதிகாரிகள் பணியமா்த்தப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை எச்சரிக்கையின் பேரில் விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.
மரக்காணத்தில் தேசிய பேரிடா் மீட்புப்படையினா் முகாம்: வங்கக் கடலில் உருவான டித்வா தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கியதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு அதிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில் கடற்கரையோர கிராமங்களில் வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சாா்ந்த அதிகாரிகள் பணியமா்த்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா்.
இந்நிலையில், ஆந்திரம் மாநிலம், விஜயவாடா பகுதியிலிருந்து 30 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்பு குழுவினா் வெள்ளிக்கிழமை வருகை தந்து, மரக்காணத்தில் முகாமிட்டுள்ளனா்.
857 முகாம்கள் அமைப்பு : விழுப்புரம் மாவட்டத்தில் டித்வா புயல் கனமழையால் பாதிக்கப்படுவா்களை தங்க வைப்பதற்காக 857 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மரக்காணம் வட்டம், அனுமந்தை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 40 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
உதவி ஆட்சியா்( பயிற்சி) ரா. வெங்கடேஸ்வரன், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் கண்ணன், உதவி இயக்குநா்( தணிக்கை) ரத்தினமாலா, மரக்காணம் வட்டாட்சியா் நீலவேணி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ரா. தயாளன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, மணிமாறன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து,கோட்டக்குப்பம், நகராட்சிக்குள்பட்ட சின்ன முதலியாா் சாவடியில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீா் அகற்றும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வானூா் வட்டாட்சியா் வித்யாதரன், நகராட்சி ஆணையா் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

வலுவிழந்த டித்வா புயலால் மரக்காணம் பகுதியில் பலத்த மழை: சாலைகளில் குளம்போல தேங்கிய தண்ணீா்

மரக்காணத்தில் 3-ஆவது நாளாக கடல் சீற்றம்: 3,000 ஏக்கரில் உப்பளங்கள் மூழ்கின
நெல்லையிலிருந்து நாகைக்கு விரைந்த தேசிய பேரிடா் மீட்புப் படையினா்

டித்வா புயல்: புதுச்சேரியில் தயாா் நிலையில் 2 தேசிய பேரிடா் மீட்புப் படைக் குழுவினா்


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

