அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ரயில்வே ஊழியர்களுக்காக தஞ்சாவூர்-திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

ரயில்வே ஊழியர்களுக்காக தஞ்சாவூர் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:41 pm

DIN

ரயில்வே ஊழியர்களுக்காக தஞ்சாவூர் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக  நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் பொது முடக்கத்தில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசு நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, ரயில்வே ஊழியர்கள், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வந்து செல்வதற்கு வசதியாகச் தஞ்சாவூர் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற நாட்களில்  தஞ்சாவூரிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, திருச்சிக்கு 7.45 மணிக்கு சென்றடைவதற்கும், திருச்சியிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூருக்கு மாலை 6.45 மணிக்கு வந்தடைவதற்கும் திட்டமிடப்பட்டது. 

இதன்படி, தஞ்சாவூரிலிருந்து இந்த ரயில் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்பட்டது. இச்சிறப்பு ரயிலில் சமூக இடைவெளியுடன் ஊழியர்கள் உட்கார வைக்கப்பட்டனர். இதில், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் உடன் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.