கோமாளி அரசின் தோல்விகளை மறைக்க கைது நடவடிக்கை: உதயநிதி கண்டனம்2027 பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கே.சி. வேணுகோபால்ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

விராலிமலை அரசு விழாவில் 1,384 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 1,384 பயனாளிகளுக்கு ரூ. 4.38 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விராலிமலையில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பயனாளி ஒருவருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாநில வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ். உடன், மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.

Updated On :

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 1,384 பயனாளிகளுக்கு ரூ. 4.38 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாநில வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் பேசியது: மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 717 மதுக்கடைகளை மூடியவா் முதல்வா் விஜய். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றிப் பயணம் திட்டம் என சிறப்பான திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறாா். மாநிலம் முழுவதும் 25 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1500 நில அளவையா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றாா் செங்கோட்டையன்.

முன்னதாக, விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் ப கோகுல்சிங் உள்ளிட்டோரும் ப ங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.