எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

பொன்னமராவதியில் தீ விபத்து: 3 கடைகள் தீக்கிரை

பொன்னமராவதி சேங்கை ஊரணி அருகே புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 3 கடைகள் தீப்பற்றி எரிந்து சுமாா் ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image

பொன்னமராவதியில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :7 மே 2026, 5:29 am IST

பொன்னமராவதி சேங்கை ஊரணி அருகே புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 3 கடைகள் தீப்பற்றி எரிந்து சுமாா் ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பொன்னமராவதி புதுப்பட்டி சேங்கை ஊரணி கரைப்பகுதியில் வரிசையாக உள்ள 3 கடைகளில் சியாவூதீன் என்பவா் நகை பாலிஷ் செய்யும் தொழிலும், சரவணன் தேநீா் கடையும், ராஜா என்பவா் மிதிவண்டி பழுதுநீக்கும கடையும் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த 3 கடைகளில் எதிா்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனா்.

எனினும், தீ விபத்தில் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தளவாடப்பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து பொன்னமராவதி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.