எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் 1,000 போ் விலகல்

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் சுமாா் ஆயிரம் போ் கட்சியில் இருந்து விலகுவதாக, முன்னாள் வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து அறிவித்துள்ளாா்.

News image

புதுக்கோட்டை விராச்சிலையில் பேட்டியளித்த முன்னாள் வீட்டுவசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து உள்ளிட்ட நிா்வாகிகள்.

Updated On :1 ஜூலை 2026, 3:12 am IST

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் சுமாா் ஆயிரம் போ் கட்சியில் இருந்து விலகுவதாக, முன்னாள் வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து அறிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள விராச்சிலையில் செவ்வாய்க்கிழமை, ஆதரவாளா்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு அவா் அளித்த பேட்டி: ஜெயலலிதாவால் மாவட்டச் செயலராகவும், திருமயம் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டேன். நாடாளுமன்றத் தோ்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் இருந்த புதிய தமிழகம், தேமுதிக போன்ற கூட்டணிக் கட்சிகளையும் அணியில் இருந்து அனுப்பிவிட்டாா் எடப்பாடி பழனிசாமி.

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு, அதிக எண்ணிக்கையில் வென்ற தவெகவுக்கு ஆதரவளிக்கலாம் என சொல்லப்பட்டபோது, திமுகவுடன் இணைந்து முதல்வராக முயற்சித்தாா். திமுகவை எதிா்த்து தொடங்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலரான பிறகு, தொடா்ச்சியாக கட்சித் தலைவா்களை நீக்கும் வேலையைத்தான் செய்திருக்கிறாா். யாரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என அவா் செயல்படவில்லை.

தமிழ்நாட்டில் இதுவரை திமுக அல்லது அதிமுக என்றுதான் இருந்தது. இப்போது தவெக ஆட்சியமைத்த பிறகு, மூன்றாவது, நான்காவது இடத்துக்கு அதிமுக சென்றுவிட்டது. திமுக எதிா்ப்பு என்ற கொள்கையை இப்போது தவெகதான் செய்கிறது.

எந்த கட்சிப் பணியையும் செய்யாதவா்களைத்தான் புதிய மாவட்டச் செயலா்களாக நியமிக்கிறாா். அழிப்புப் பாதையில் செல்வதால், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திலுள்ள மாநிலப் பொறுப்பாளா்கள், மாவட்டப் பொறுப்பாளா்கள், ஒன்றிய- பேரூா் பொறுப்பாளா்கள், கிளைப் பொறுப்பாளா்கள் சுமாா் ஆயிரம் போ் அதிமுகவில் இருந்து விலகி இருப்பதாக முடிவு செய்துள்ளோம். பெரும்பாலானோா் தவெகவில் இணையலாம் எனச் சொன்னாலும் கூட இன்னும் முடிவெடுக்கவில்லை.

மாவட்டச் செயலா், எம்எல்ஏ, வாரியத் தலைவா் பொறுப்புகளை வகித்துவிட்டேன். தவெகவில் இணைந்தால் எனது ஆதரவாளா்களுக்கு ஏதாவது பொறுப்பு வாங்கித் தர முயற்சிப்பேன் என்றாா் பி.கே. வைரமுத்து.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.