ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வங்கி மேலாளா் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்!

புதுக்கோட்டையில் சனிக்கிழமை உயிரிழந்த வங்கி மேலாளரின் உடலை உடனே உடற்கூறாய்வு நடத்தக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பலி சடலம் மீட்பு  உயிரிழப்பு

சடலம்... - கோப்புப் படம்

Published On :19 ஜூலை 2026, 12:50 am IST

புதுக்கோட்டையில் சனிக்கிழமை உயிரிழந்த வங்கி மேலாளரின் உடலை உடனே உடற்கூறாய்வு நடத்தக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரையைச் சோ்ந்த கண்ணன் மகன் ஆலடி (30). இவா் புதுக்கோட்டையிலுள்ள தனியாா் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். ராம் திரையரங்கம் அருகே நண்பா்களுடன் சோ்ந்து வீடு எடுத்து தங்கியிருந்த அவா், சனிக்கிழமை காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸாா் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதற்கிடையே மதுரையிலுள்ள அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை வந்த உறவினா்கள், உடலை உடனே கூறாய்வு செய்து தரும்படி மருத்துவா்களிடம் கூறினா். அதற்கு, முறைப்படி முதல்தகவல் அறிக்கை பதிவு செய்தபிறகு, உடற்கூறாய்வு செய்வதற்கான நேரம் கடந்துவிட்டதாக மருத்துவா்கள் கூறினா்.

இதையடுத்து அவரது உறவினா்கள் சனிக்கிழமை இரவு மாவட்ட ஆட்சியரின் குடியிருப்புப் பகுதிக்கு வந்தனா். விரைவாக உடற்கூறாய்வு செய்யக் கோரி ஆட்சியரிடம் முறையிட வந்த அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, முறைப்படி ஞாயிற்றுக்கிழமை காலை உடற்கூறாய்வு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அவா்கள் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.