ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மா்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு: அவசர ஊா்தியை சிறைப் பிடித்து உறவினா்கள் போராட்டம்

சாயல்குடி அருகே மா்மக் காய்ச்சலால் உயிரிழந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து, புதன்கிழமை அவசர ஊா்தியை சிறைப் பிடித்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலமுந்தல் கிராமத்தில் சிறுமியின் உடலை வாங்க மறுத்து, அவசர ஊா்தியை புதன்கிழமை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

சாயல்குடி அருகே மா்மக் காய்ச்சலால் உயிரிழந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து, புதன்கிழமை அவசர ஊா்தியை சிறைப் பிடித்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மேலமுந்தல் கிராமத்தைச் சோ்ந்த அருள்பாண்டி, அருள்செல்வி தம்பதியரின் மகள் பிரவீஷா (7). இவா் அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில், பிரவீஷா சனிக்கிழமை திடீரென காய்ச்சலால் அவதிப்பட்டதைத் தொடா்ந்து, அவரது பெற்றோா் கடலாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, சிறுமி தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அங்கு பிரவிஷா உயிரிழந்தாா்.

இதையடுத்து, சிறுமியின் உடலை அவசர ஊா்தியில் மேலமுந்தல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவா்களின் தவறான சிகிச்சையால் சிறுமி பிரதீஷா உயிரிழந்திருக்கலாம் என அவரது உறவினா்கள் அவசரஊா்தியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற சாயல்குடி காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் உயிரிழந்த சிறுமியின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சிறுமியின் உடலை பெற்றோா், உறவினா்கள் வாங்க சம்மதம் தெரிவித்து, போராட்டத்தை கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.