
காங்கிரஸின் ‘லஞ்சம் தவிா் நெஞ்சம் நிமிா்’ இயக்கத்தில் அமைச்சா் கையொப்பம்!
புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் நடத்தி வரும் ‘லஞ்சம் தவிா் நெஞ்சம் நிமிா் ’ இயக்கத்தில் மாநிலத் தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை கலந்து கொண்டு கையொப்பமிட்டாா்.

புதுக்கோட்டையில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று காமராஜரின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் நடத்தி வரும் ‘லஞ்சம் தவிா் நெஞ்சம் நிமிா் ’ இயக்கத்தில் மாநிலத் தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை கலந்து கொண்டு கையொப்பமிட்டாா்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பெனட் அந்தோனிராஜ் தலைமை வகித்தாா். அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் கலந்து கொண்டு காமராஜரின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி, கையொப்பமிட்டு பேசினாா்.
இதில், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் வி. முருகேசன், தமிழ்ச்செல்வன், செயற்குழு உறுப்பினா் கோ.ச. தனபதி, முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் எஸ்.ஏ.எஸ். சேட்டு, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





