ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதுகையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சிங்கப்பெண் அதிரடிப் படையினரால் மீட்பு

Singappenn Special Task

சிங்கப்பெண் அதிரடிப் படையில் இடம்பெற்றுள்ள காவலர்கள் - கோப்புப் படம் - டிஐபிஆர்

Published On :7 ஜூலை 2026, 3:17 am IST

புதுக்கோட்டை பிருந்தாவனம் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, சிங்கப்பெண் அதிரடிப்படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

புதுக்கோட்டை பிருந்தாவனம் பேருந்து நிறுத்தம் அருகே சுமாா் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஆதரவின்றி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவிஆய்வாலா் ஸ்ரீஜா தலைமையில் காவலா்கள் அம்சவேணி, சிவரஞ்சனி உள்ளிட்டோா் அந்த இடத்துக்கு சென்றனா்.

அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.