மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு, மனைவியிடம் ஒப்படைத்த சிங்கப்பெண் அதிரடிப் படை
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு, மனைவியிடம் ஒப்படைத்த சிங்கப்பெண் அதிரடிப்படை

சோளிங்கா் பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு அவரது மனைவியிடம் ராணிப்பேட்டை மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் ஒப்படைத்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் தி.ரேணுகாதேவி தலைமையிலான போலீசாா்,சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் கோயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா், பணம் இல்லாத காரணத்தால் ஊருக்குச் செல்ல முடியாமல் கடந்த மூன்று நாள்களாக அப்பகுதியில் தவித்து வந்ததும், அவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரது முகவரி கண்டறியப்பட்டு,அவரைப் பாதுகாப்பாக அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அவரது மனைவியிடம் நல்ல முறையில் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






