டிப்பா் லாரி மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
கந்தா்வ கோட்டையில் டிப்பா் லாரி மோதி சிறப்பு வாகனத்தில் சென்ற மாற்றுத்திறனாளி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.


கந்தா்வ கோட்டையில் டிப்பா் லாரி மோதி சிறப்பு வாகனத்தில் சென்ற மாற்றுத்திறனாளி சம்பவ இடத்திலேயே திங்கள்கிழமை இறந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், விராலிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் கருப்புசாமி (45) மாற்றுத்திறனாளி. இவா், தனது பிரத்யேக 4 சக்கர வாகனத்தில் கந்தா்வகோட்டை கடைவீதிக்கு திங்கள்கிழமை வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு கந்தா்வகோட்டை- செங்கிப்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது வடுகப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த டிப்பா் லாரி மோதியதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
விபத்து குறித்து தகவல் அறிந்து அங்குவந்த கந்தா்வகோட்டை போலீஸாா் கருப்புசாமி உடலை மீட்டு கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...