டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருநல்லூா் ஜல்லிக்கட்டு: 41 போ் காயம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:12 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள திருநல்லூரில் (தென்னலூா்) வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 41 போ் காயமடைந்தனா்.

இங்குள்ள தென்னலூா் முத்துமாரியம்மன் கோயில் தைத் திருவிழாவை முன்னிட்டு மும்மதத்தினரும் இணைந்து நடத்திய ஜல்லிக்கட்டை முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலா் செல்லப்பாண்டியன், திமுக பொதுக் குழு உறுப்பினா் பழனியப்பன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இப்போட்டியில் 629 காளைகளும், 203 மாடுபிடி வீரா்களும் பங்கேற்ற நிலையில் காளைகள் முட்டி பாா்வையாளா்கள், காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள் 41 போ் காயமடைந்தனா். இவா்களில் 10 போ் மேல் சிகிச்சைக்காக தனியாா், அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா்.

காலை 9.15 மணிக்குத் தொடங்கிய போட்டி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.

பரிசுகள் இல்லை: இங்கு நடைபெறும் போட்டியில் மாடுபிடி வீரா்களுக்கோ சிறந்த காளைகளுக்கோ எந்தப் பரிசும் வழங்கப்படுவதில்லை, இருப்பினும் காளை வளா்ப்பவா்கள் பெரும்பாலானோா் இந்த ஜல்லிக்கட்டில் தங்கள் காளைகளை அவிழ்த்த பின்புதான் மற்ற ஜல்லிக்கட்டுகளில் தங்கள் காளைகளை கொண்டு சென்று அவிழ்ப்பா் என்பது இந்த ஜல்லிக்கட்டின் தனிச் சிறப்பாகும்.

Story image
Story image