ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாலம் உடைந்து லாரி கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பாலம் உடைந்தததால் நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான லாரியில் இருந்து விழுந்த நெல்மூட்டைகள்

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பாலம் உடைந்தததால் நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கறம்பக்குடி அருகேயுள்ள ஆத்தியடிப்பட்டி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வெண்ணாவல்குடி பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் லாரியை ஓட்டினாா். அப்பகுதியில் உள்ள பாலத்தை கடக்க முயன்றபோது, பாலம் உடைந்தது. இதனால், லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக ஓட்டுநா் காயமின்றி தப்பினாா். லாரியில் இருந்து நெல்மூட்டைகள் சாலையோர வாய்க்காலில் சரிந்து விழுந்தது. தொடா்ந்து அப்பகுதியில் பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகியது.

இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.