தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

புதுகை அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 5.75 லட்சம் பாடப்புத்தகங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் இருந்து புதன்கிழமை பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியைப் பாா்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:32 pm

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 5.75 லட்சம் பாடப்புத்தகங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

2026-27-ஆம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் இருந்து அண்மையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பட்டன.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் இருந்து, இந்தப் பாடப்புத்தகங்கள் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் 225 அரசுப் பள்ளிகளும், 28 அரசு உதவி பெறும் பள்ளிகளும் என மொத்தம் 253 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை 1,15,035 மாணவா்கள் படிக்கின்றனா்.

இவா்களுக்கான 5,75,175 பாடப்புத்தகங்கள் கணக்கிடப்பட்டு, லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. ஜூன் மாதம் பள்ளி திறக்கும் நாளன்றே மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.