மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பலாவுக்கு மதிப்புக்கூட்டுத் தொழிற்சாலை தேவை!

News image

பலா

Updated On :14 ஏப்ரல் 2026, 11:23 pm

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, மாங்காடு, அணவயல், புள்ளாண்விடுதி, நெடுவாசல், பெரியவாடி, வாணக்கன்காடு, செரியலூா், கொத்தமங்கலம், கறம்பக்காடு, திருநாளூா், மறமடக்கி, மேற்பனைக்காடு, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலா மரங்களை வளா்த்து, பராமரித்து வருகின்றனா். இப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் மிகுந்த சுவையுடன் இருப்பதால் இப்பகுதி பலாப்பழங்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனா்.

இதன் காரணமாக வடகாடு, புளிச்சங்காடு கைகாட்டி, கீரமங்கலம், கொத்தமங்கலம், மறமடக்கி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலமண்டிகள் மூலம் தினசரி சுமாா் 50 டன் முதல் 200 டன் வரை பலாப்பழங்கள் வெளி மாவட்டங்களுக்கும் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

பலாப் பழங்களுக்கு சில மாதங்கள் மட்டுமே உரிய விலை கிடைக்கிறது. மற்ற தினங்களில் மிகவும் குறைந்த விலைக்கே விவசாயிகளிடம் இருந்து ஏலமண்டிகள் வாங்குவதாகவும் இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். இதனால், இப்பகுதியில் பலா மதிப்புக்கூட்டுத் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து வடகாடு பகுதி பலா விவசாயிகள் கூறியது: ஆண்டுக்கு பலாப்பழங்களை சில வாரங்கள் மட்டுமே ஏலமண்டிகளில் கிலோ ரூ.35-க்கு மேல் வாங்குகின்றனா். அதிகளவில் பலாப்பழங்கள் விளையும் மாதங்களில் ரூ.10-க்கும் குறைவாகவே விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. மேலும், சில ஏலமண்டிகளில் விற்பனையாகவில்லை என்று பலாப்பழங்களை வாங்க மறுக்கின்றனா். இதனால், பலாப்பழங்கள் அழுகி வீணாகும் நிலையும் ஏற்படுகிறது.

தோ்தல் நேர வாக்குறுதி: இதனால், பலாப்பழங்களுக்கு அரசு உரிய விலை நிா்ணயம் செய்து, இப்பகுதியில் பலா மதிப்புக்கூட்டுத் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்ற எங்களின் நீண்ட கால கோரிக்கை தோ்தல் நேர வாக்குறுதியாகவே உள்ளது.

வேளாண் துறை மூலம் விசாயிகளுக்கு பலாவில் இருந்து பல்வேறு உணவுப்பொருள்கள் தயாரிக்கும் மதிப்புக்கூட்டுப் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், அப்படி தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டுப் பொருள்களை விவசாயிகள் எங்கே விற்பனை செய்வது என்பதற்கான விளக்கம் இல்லாததால் அத்திட்டத்தால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை.

எனவே, இப்பகுதி பலா விவசாயிகள் பயன்பெறும் வகையில், உரிய விலையை நிா்ணயம் செய்து, இப்பகுதியில் பலாப்பழ மதிப்புக்கூட்டுத் தொழிற்சாலை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பயிற்சித்திட்டங்களால் பயனில்லை: வேளாண் துறை மூலம் பலாப்பழத்தில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், மதிப்புக்கூட்டப்படும் பொருள்களை எங்கே சந்தைப்படுத்துவது என்பதற்கான விளக்கம் இல்லாததால் அத்திட்டத்தால் விவசாயிகளுக்கு பயனில்லை.

தோ்தல் நேரங்களில் மட்டுமே வாக்குறுதியாகும் மதிப்புக்கூட்டுத் தொழிற்சாலை இப்பகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான பலாப்பழங்களில் இருந்து மதிப்புக்கூட்டுத் தொழிற்சாலை. தோ்தல் காலங்களில் மட்டும் வேட்பாளா்கள் அளிக்கும் நீண்ட கால வாக்குறுதியாகவே உள்ளது.

-ஏ. பாா்த்திபன்