மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா

கந்தா்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:45 pm

கந்தா்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மாா்ச் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன்   தொடங்கியது. தொடா்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், குதிரை, சிம்மம் உள்ளிட்ட வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டில் உற்ஸவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் நிலைக்கு வந்தபிறகு பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனா். பின்னா் கிடாவெட்டும், அம்மன் தடம்பாா்த்தல் நிகழ்வும் நடைபெற்றது.

விழாவில் ஆதனக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த   திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். மாலை மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவுபெற்றது.

ஏற்பாடுகளை விழாக் குழுவினரும் இந்துசமய அறநிலையத்துறையினரும் ஆதனக்கோட்டை கிராம மக்களும் செய்திருந்தனா்.