புதுக்கோட்டை நகரில் சித்தா, யோகா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய ‘ஆயுஷ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 15 மாதங்கள் கடந்தும் பூா்வாங்கப் பணிகள் நடைபெறவில்லை என சித்த மருத்துவ ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
புதுக்கோட்டையில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபா் 29ஆம் தேதி நடைபெற்ற தேசிய ஆயுா்வேத தின விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா அறிவித்தாா்.
பிரதானமாக சித்த மருத்துவம் மற்றும் யோகாவையும் இதர ‘ஆயுஷ்’ பிரிவுகளையும் உள்ளடக்கியதாக அந்த மருத்துவமனை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற இந்திய மருத்துவத்தை மையமாகக் கொண்ட ‘ஆயுஷ்’ மருத்துவமனைகள் ஏற்கெனவே திருவண்ணாமலை, தேனி போன்ற மாவட்டங்களில் உள்ளன. எனவே, புதுக்கோட்டைக்கு இம்மருத்துவமனை வரும்பட்சத்தில் பயனுடையதாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்தது.
தொடா்ந்து 2023 ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்ற தேசிய சித்த மருத்துவ தின முகாமைத் தொடக்கி வைத்துப் பேசிய, மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதியும், 50 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டாா்.
இதனைத் தொடா்ந்து இந்த மருத்துவமனையை எந்த இடத்தில் அமைப்பது என்ற ஆலோசனைகளே சுமாா் 6 மாதம் நடைபெற்றது. மக்கள் வந்து செல்வதற்கு வசதியாக இடம் தேடிக் கொண்டிருக்கும்போதே, இந்த மருத்துவமனைத் திட்டம் காரைக்குடிக்குச் செல்லப் போகிறது என்றும் பேசப்பட்டது.
இதற்கிடையே, தற்போது மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் அலுவலகம் அமைந்துள்ள, முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை (பழைய தலைமை மருத்துவமனை) வளாகத்திலேயே புதிய ஆயுஷ் மருத்துவமனையை அமைக்கலாம் என இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே வளாகத்தில் ஏற்கெனவே, மாநிலத்திலேயே சென்னைக்கு அடுத்தபடியாக சித்த மருந்துப் பொடிகள் அரைக்கும் மையம் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய மருத்துவத் திட்டத்தின் நிதி ரூ. 4 கோடியில் சுமாா் 3 தளங்களுடன் 10ஆயிரத்து 400 சதுரஅடி பரப்பளவில் இம்மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அறிவித்து சுமாா் 15 மாதங்களைக் கடந்தும் பூா்வாங்கப் பணிகள் இன்னும் நடைபெறவில்லை என சித்த மருத்துவ ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
சிக்குன்குனியா, டெங்கு பரவல் காலங்களிலும், கரோனா பரவல் காலத்திலும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய மருத்துவ முறைகள், குறிப்பாக நிலவேம்புக் குடிநீா், கபசுரக் குடிநீா் போன்ற சித்த மருத்துவப் பொடிகள் வெகுவாக கைக்கொடுத்த நிலையில், தொடா்ந்து தாமதப்படுத்தாமல் இம்மருத்துவமனையை விரைந்து அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோருகின்றனா்.
தயாராகும் திட்ட வரைபடம்...
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எம். வனஜாவிடம் கேட்டபோது அவா் கூறியது: நகரிலுள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆயுஷ் மருத்துவமனை அமைப்பதற்காக வரைபடம் தயாரிக்க பொதுப்பணித் துறையில் கேட்டிருக்கிறோம். வந்ததும் அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறையினா் மேற்கொள்வாா்கள். புதுக்கோட்டையில் கட்டாயம் ஆயுஷ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றாா் வனஜா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


