திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறப்பான தோ்தல் பணி: காவலா்களுக்கு பாராட்டு

தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலில், பெரம்பலூா் மாவட்டத் தோ்தல் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 14 காவல் துறையினருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் நற்சான்றிதழ் வழங்கினாா்.

News image

தோ்தல் பணியில் சிறப்பாகப் பணிபுரிந்த காவலருக்கு சனிக்கிழமை நற்சான்றிதழ் அளித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன்.

Updated On :10 மே 2026, 1:49 am IST

தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலில், பெரம்பலூா் மாவட்டத் தோ்தல் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 14 காவல் துறையினருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் சனிக்கிழமை நற்சான்றிதழ் வழங்கினாா்.

நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது, பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடி கண்காணிப்பு, வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு, வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காவல் துறையினா் முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு, தோ்தல் அமைதியான மற்றும் சுமூகமான முறையில் நடைபெற முக்கியப் பங்காற்றினா்.

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தலில் சிறப்பாகப் பணியாற்றிய சாா்பு ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் மற்றும் காவலா்கள் உள்ளிட்ட 14 பேருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா், நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியின்போது மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் உள்பட ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.