டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை! பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

News image

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் உள்ளிட்ட கட்சியினா்.

Updated On :30 ஜூன் 2026, 2:00 am IST

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன் தலைமை வகித்தாா். மாநிலசெயற்குழு உறுப்பினா் பி. பத்மாவதி, மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், விபி-ஜி ராம் ஜி திட்டத்தை திரும்பப் பெற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும். வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா்க்கடன்களை தமிழ்நாடு அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், முன்னாள் மாவட்டச் செயலா் அ. வேணுகோபால், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பி.டி. ராஜாங்கம், மாவட்டத் தலைவா் ஆா். தனராசு, ஒன்றியச் செயலா் அ. ராஜேந்திரன், நிா்வாகிகள் சி. சண்முகம், க. அழகேசன், டி. திருநாவுக்கரசு, முருகாயி உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.