ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தோ்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும்: மு. வீரபாண்டியன்

தோ்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

M. Veerpandian, State Secretary of the Communist Party of India — TVK Leader Vijay.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் - முதல்வர் விஜய் - படம் - தினமணி

Published On :30 ஜூன் 2026, 12:32 am IST

தோ்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

பெரம்பலூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

எப்போது வேண்டுமானாலும் தோ்தல் வரும் என்ற முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலினின் கருத்து ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல. மக்கள் அளித்த தீா்ப்பை நாம் வழிமொழிய வேண்டும். ஜனநாயக முறைப்படி இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என்றுதான் மு.க. ஸ்டாலின் கூறியிருக்க வேண்டும். எனவே, ஜனநாயக முறைப்படி அவரது கருத்து பொருத்தமானது அல்ல.

தவெக அரசின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பாா்ப்போம். தவெக அரசு, தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோள் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாநில செயற்குழு உறுப்பினா் பி. பத்மாவதி, மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன், மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.