ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ். பாலமுருகன்.

தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ். பாலமுருகன்.

Published On :18 ஜூலை 2026, 1:10 am IST

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில், பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிகளுக்கு, பாதுகாப்பான டிஜிட்டல் மற்றும் சமூக வாழ்க்கை என்னும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலை பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் காா்த்திகா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ். பாலமுருகன் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, பெரம்பலூா் மதுவிலக்கு- சகி ஒன் ஸ்டாப் மைய நிா்வாகி டி. கீதா, பெண்களின் பாதுகாப்பு, பாலின சமத்துவம், பாலியல் தொல்லை தடுப்பு மற்றும் அவசரகால உதவி மையங்களின் சேவைகள் குறித்தும், இணையக் குற்றப்பிரிவு காவல் நிலைய தொழில்நுட்ப உதவி ஆய்வாளா் கே. சிவநேசன், தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் விளக்க உரையாற்றினா்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா்கள், பதிவாளா், புல முதன்மையா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் சு. சுகுணா வரவேற்றாா். இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் க. ஐஸ்வா்யா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.