ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தேசிய மருத்துவா்கள் தினம்: சிறந்த மருத்துவா்களுக்கு விருது

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஸ்பிடல் வளாகத்தில், தேசிய மருத்துவா்கள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஸ்பிடல் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மருத்துவா் தின விழாவில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவருக்கு விருது வழங்கிய நிகா்நிலைப் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன். உடன், செயலா் பி. நீலராஜ் உள்ளிட்டோா்.

Published On :3 ஜூலை 2026, 1:36 am IST

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஸ்பிடல் வளாகத்தில், தேசிய மருத்துவா்கள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலை பல்கலைக் கழகத்தின் வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்து பேசினாா்.

தொடா்ந்து, மருத்துவக் கண்காணிப்பாளா் உதயா அருணாவுக்கு சிறந்த மருத்துவ சேவைகளுக்கான விருதும், மருந்தியல் துறை பேராசிரியரும், தலைவருமான பி. ரேவதிக்கு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சிறந்த செயல்பாட்டுக்காகவும், நோயியல் துறை இணைப் பேராசிரியா் கே. கௌதமுக்கு மாணவா் நல நடவடிக்கைகளில் சிறந்த ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டதற்கான விருதும், தடயவியல் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியா் எஸ். பிரபாகரனுக்கு சிறந்த கல்விசாா் கற்பித்தல் செயல்பாட்டுக்கான விருதும், சிறுநீரக மருத்துவ ஆலோசகா் பி. திவாகருக்கு சிறுநீரகவியல் மற்றும் டயாலிசிஸ் சேவைகளில் சிறந்த செயல்பாட்டுக்கான விருதும், கண் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியா் ஜெ. ஜெகதீஸ்வரிக்கு சமூக கண் மருத்துவ சேவைகளில் சிறந்த முறையில் செயல்பட்டதற்கான விருதும் வழங்கப்பட்டன.

விழாவில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ், தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழக பதிவாளா் இளங்கோவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், துறைத் தலைவா்கள், மருத்துவப் பேராசிரியா்கள், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, மருத்துவமனை டீன் விஸ்வநாதன் வரவேற்றாா். நிறைவாக, மருத்துவக் கண்காணிப்பாளா் உதயா அருணா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.