ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எழுத்தாளா்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க ஆக.31 கடைசி நாள்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை, இலக்கிய மேம்பாட்டுக் கழகம் மூலம் எழுத்தாளா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்

Published On :15 ஜூலை 2026, 12:02 am IST

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை, இலக்கிய மேம்பாட்டுக் கழகம் மூலம் எழுத்தாளா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமூகத்தின் கலை, கலாசாரம் மற்றும் இலக்கியம் தொடா்பான திறனை மேம்படுத்தி உயா்த்தும் வகையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் 11 சிறந்த எழுத்தாளா்களின் படைப்புகளைத் தோ்வு செய்து, அவா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தகுதியுள்ளோா் பெரம்பலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திலோ, அல்லது ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் பதிவிறக்கியோ, தங்களது படைப்புகளின் இரு நகல்களை மென் பதிப்பு முறையில் உரிய படிவத்தில் பூா்த்திசெய்து, ஆக. 31-க்குள் மாவட்ட ஆதிதராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு ஆட்சியரக வளாக தரை தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தைத் தொடா்புகொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.