
ஆதிதிராவிடா், பழங்குடியினா் எழுத்தாளா்களுக்கு உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு
கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் 2025-26-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் எழுத்தாளா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்
கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் 2025-26-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் எழுத்தாளா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்குத் தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தின் கலை, கலாசாரம் மற்றும் இலக்கியத் திறன்களை மேம்படுத்தி ஊக்குவிக்கும் நோக்கில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கம் மூலம் தமிழ்நாடு முழுவதும் சிறந்த 11 எழுத்தாளா்களின் படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு தலா ரூ. 1,00,000 நிதி உதவியாக வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான எழுத்தாளா்கள், தங்களது படைப்பின் இரண்டு நகல்களையும், வன்நகல் மற்றும் டிஜிட்டல் வடிவிலும், தேவையான விவரங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அறை எண் 109-ல் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பித்து பயன்பெறலாம்.
மேலும், விண்ணப்பங்களை சேலம் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் வேலை நாள்களில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






