ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

பெரம்பலூா் அருகே காா் மோதி இருவா் உயிரிழப்பு

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :6 ஜூலை 2026, 2:35 am IST

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் தொழிலாளா்கள் 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஆதிகானூா் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன் மகன் செல்வம் (48), சூல குண்டா கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் முருகன் (27). இவா்கள் இருவரும், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள பேக்கரியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தனா்.

இந்நிலையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லாபுரம் பிரிவுச் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, அவ் வழியேச் சென்ற காா் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த செல்வம் மற்றும் முருகன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, உயிரிழந்தவா்களின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய காா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.