புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

லாரி மோதி ஒப்பந்தப் பணியாளா் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே லாரி மோதியதில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :4 ஜூலை 2026, 2:53 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரி மோதியதில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், அருவாப்பாக்கம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் மா.காா்த்திக் (23). நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்த இவா், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் மேல்பேட்டை பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரி காா்த்திக் மீது மோதிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த ரோஷணை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.