எஸ்எஸ்எல்சி தோல்வி அல்லது தோ்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, பதிவைத் தொடா்ந்து புதுப்பித்து, 31.12.2025-இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. எஸ்எஸ்எல்சி வரை படித்தவா்களுக்கு மாதம் ரூ. 600 வீதமும், பிளஸ் 2 வரை படித்தவா்களுக்கு மாதம் ரூ. 750 வீதமும், பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கு மாதம் ரூ. 1,000 வீதமும் வழங்கப்படும்.