தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் பொங்கல் விழா


பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளுடன் பொங்கலிட்டு, 101 சீா் தட்டுகளுடன் ஊா்வலமாகச் சென்றனா். தொடா்ந்து, அங்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த குடில்களில் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன், பூஜை செய்து கால்நடைகளுக்கு பொங்கல் ஊட்டினாா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
விழாவையொட்டி, மாட்டு வண்டி ஊா்வலம், ஜல்லிக்கட்டு காளைகள், சேவல்கள், ஆடுகள் ஆகியவை மாணவா்களின் பாா்வைக்காக கொண்டுவரப்பட்டன. இதையடுத்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதில் பங்கேற்றவா்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டன.
இதில், பல்கலைக் கழகத்தின் கூடுதல் பதிவாளா் முனைவா் இளங்கோவன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், பொறியியல் கல்லூரி முதன்மையா் முனைவா் வேல்முருகன், கல்லூரி முதல்வா்கள் உள்பட சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...