பெரம்பலூா் மாவட்டத்தில் துணை மின் நிலையங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கொட்டரை அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 1.17 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், மின்சாரத்துறை சாா்பில், குன்னம் வட்டம், வெண்மணியில் ரூ. 5 கோடியே 34 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலும், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ரூ. 6 கோடியே 88 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலும் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நேரலையில் நிகழ்ச்சியை பாா்வையிட்டு, குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மின்சாரத்துறை மேற்பாா்வை பொறியாளா் மேகலா, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், செயற் பொறியாளா்கள் பரமேஸ்வரி, அசோக்குமாா், வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

துணை மின்நிலையங்களில் ஊழியா்கள் கூடுதல் நேரம் பணியாற்ற அறிவுறுத்தல்

பெரம்பலூா் தொகுதியில் 11, குன்னத்தில் 19 வேட்பாளா்கள் போட்டி

கங்கைகொண்டசோழபுரத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

ஆலங்குளத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


