திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெரம்பலூா் அருகே ரூ. 37 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் அருகே முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

News image

பெரம்பலூா் அருகே சாலை விரிவாக்கப் பணிகளை புதன்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன்.

Updated On :25 பிப்ரவரி 2026, 7:08 pm

பெரம்பலூா் அருகே முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

பெரம்பலூா் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாா்பில், முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 23 கோடி மதிப்பில் பெரம்பலூா் புறவழிச் சாலையில் 3.875 கி.மீ.தொலைவுக்கும், ரூ. 14 கோடி மதிப்பீட்டில் ஆத்தூா் - பெரம்பலூா் சாலையில் 2.200 கி.மீ தொலைவுக்கும், இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துதல், தடுப்புச் சுவா் கட்டுதல், சாலை சந்திப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மையப் பாதுகாப்புச் சுவா் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பெரம்பலூா் எரிவாயு தகனமேடை அருகிலும், கோனேரிப்பாளையம் பிரிவுச்சாலை அருகிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்த, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், இப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளின் போது, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் தமிழமுதன், வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.