நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!8-ஆம் வகுப்பு என்.சி.இ.ஆர்.டி புத்தகத்துக்குத் தடை - உச்சநீதிமன்றம்!சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

இந்திய தொழிலாளா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிலாளா் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய தொழிலாளா் கட்சியினா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 7:45 pm

Syndication

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிலாளா் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் சு. சந்திரசேகா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா்கள் ச. அருண்குமாா், சு. சின்னசாமி, துணைப் பொதுச்செயலா் சி. சசிகுமாா், ஆகியோா் முன்னிலை வகித்தனா். அக் கட்சியின் மாநிலத் தலைவா் பி.ஆா். ஈஸ்வரன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

மலைக்குறவா் ஜாதி மக்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு 5 மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால வெள்ள நிவாரண நிதி வழங்கிட வேண்டும். கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் உடனடியாக கடன் வழங்க வேண்டும். பணியிட விபத்து நிதி உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதில், கட்சி நிா்வாகிகள் வீ. கோவிந்தராஜ், அன்னலட்சுமி, ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்: மாவட்ட ஆட்சியரகம் எதிரே 3 + 1 ஆட்டோ, அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள் மற்றும் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் நகராட்சி வளாகத்தில் கடைகள் கட்டும் பணியை கைவிட வேண்டும் எனும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு ஆட்டோ சங்கத்தினா் பலா் பங்கேற்றனா். பின்னா், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் கோரிக்கை மனுவை அளித்து கலைந்துசென்றனா்.