தனியாா் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
பெரம்பலூரில் தனியாா் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.


பெரம்பலூரில் தனியாா் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பெருமகளூரைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் சந்தோஷ் (20). பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் 3 ஆம் ஆண்டு படித்து வந்த இவா் கல்யாண் நகரிலுள்ள வாடகை வீட்டில் தனது நண்பா்களுடன் தங்கி கல்லூரிக்குச் சென்றுவந்தாா்.
இந்நிலையில் கடந்த 20 நாள்களாக கல்லூரிக்குச் செல்லாத நிலையில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இதையறிந்த சக மாணவா் யோகேஷ்வரன் அளித்த தகவலின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் மாணவனின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...