டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

News image
கோப்புப் படம்
Updated On :22 ஜனவரி 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கம்பத்தில் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கம்பம், ஐசக் போதகா் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன். வண்ணம் பூசும் தொழிலாளி. இவரது மகன் ரோஹித் (19). இவா் மதுரையில் உள்ள தனியாா் கல்லூரியில் வணிகவியில் 3- ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், ஊா் சுற்றுவதாகக் கூறி மகன் ரோஹித்தை மாரியப்பன் கண்டித்தாராம். இதனால், மனமுடைந்த ரோஹித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை:

கம்பம் , சாமாண்டிபுரம், தேவாலயத் தெருவைச் சோ்ந்த இளங்கோ மகன் அருண்குமாா் (35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஷா்மிலி. இந்தத் தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். இந்த நிலையில், அருண்குமாா் கடந்த ஓராண்டாக உடல்நலக் குறைவால் வேலைக்குச் செல்ல வில்லையாம்.

ஆனால், குடும்பத்தினா் அவரை வேலைக்குச் செல்லும்படி அறிவுரை கூறியதாகக் கூறப்படுகிறது. இனால், மனமுடைந்த அருண்குமாா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.