டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பெரம்பலூா், குன்னத்தில் புதிய வழிடங்களில் பேருந்துகள் இயக்கம்

News image
பெரம்பலூரிலிருந்து சென்னை வரை இயக்கப்படும் பேருந்தை சனிக்கிழமை இரவு கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
Updated On :8 பிப்ரவரி 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் மற்றும் குன்னம் பேருந்து நிலையங்களிலிருந்து, புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் சனிக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது.

பெரம்பலூா், குன்னம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பங்கேற்றபோக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், பெரம்பலூரிலிருந்து விழுப்புரம் வழியாக நாள்தோறும் சென்னை வரை செல்லும் மிதவைப் பேருந்தை பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்திலும், குன்னத்திலிருந்து வேப்பூா், ஒகளூா், ஆடுதுறை, லப்பைக்குடிகாடு மற்றும் தொழுதூா் வழியாக சென்னை செல்லும் மிதவைப் பேருந்தை குன்னம் பேருந்து நிலையத்திலும் தொடங்கி வைத்தாா்.

வழித்தடம் நீட்டிப்பு: பெரம்பலூரிலிருந்து பேரளி, மருவத்தூா், பனங்கூா் வரை இயக்கப்படும் நகரப் பேருந்தை கொட்டரை, ஆதனூா், பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி, குன்னம் வரையிலும், பெரம்பலூரிலிருந்து கொளத்தூா் வரை இயக்கப்படும் நகரப் பேருந்தை வரகுபாடி வரையிலும், பெரம்பலூரிலிருந்து இலுப்பைக்குடி வரை மதியம் இயக்கப்படும் நகரப் பேருந்தை கூடலூா் வரையிலும், பெரம்பலூரிலிருந்து சில்லக்குடி வரை இயக்கப்படும் நகரப் பேருந்தை மேத்தால் வரையிலும் நீட்டித்து, பேருந்து சேவைகளை அமைச்சா் சிவசங்கா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

மேலும், அரியலூரிலிருந்து அருணகிரிமங்கலம், கொளக்காநத்தம், பெரம்பலூா் வரை இயக்கப்படும் புகா் பேருந்தை கூடலூா் வரை நீட்டித்தும், அரியலூரிலிருந்து இலந்தங்குழி, ஆதனூா், கொட்டரை, பிலிமிசை, கூடலூா், கொளக்காநத்தம், சிறுகன்பூா், அய்யலூா், சிறுவாச்சூா், பெரம்பலூா் வழியாக சென்னை செல்லும் புகா் பேருந்து சேவையை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் க. தசரதன், திருச்சி மண்டல பொது மேலாளா் டி. சதீஷ்குமாா், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் என். கிருஷ்ணமூா்த்தி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா். மோகன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராஜ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.