ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குரங்கை பிடித்து சித்ரவதை செய்த மூவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

பெரம்பலூா் அருகே குரங்கை பிடித்து துன்புறுத்திய 3 பேருக்கு வனத் துறையினா் ரூ. 50 ஆயிரம் அபராதத்தை செவ்வாய்க்கிழமை விதித்தனா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

பெரம்பலூா் அருகே குரங்கை பிடித்து துன்புறுத்திய 3 பேருக்கு வனத் துறையினா் ரூ. 50 ஆயிரம் அபராதத்தை செவ்வாய்க்கிழமை விதித்தனா்.

பெரம்பலூா் அருகே கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிந்த ஏராளமான குரங்குகளை பிடிக்க திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த சு, ஜீவா, ப. சின்னதுரை ஆகியோரை கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியன் வரவழைத்தாா்.

அப்போது பிடிபட்ட குரங்குகளில் ஒன்றை அவா்களில் ஒருவா் கடுமையாகத் துன்புறுத்தினாா். இதைக் கல்லூரி காவலாளியான சிதம்பரத்தை சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் தனது கைப்பேசி மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினாா்.

இதையறிந்த வனத்துறை அலுவலா்கள் திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்று முதல்வரிடம் மேற்கொண்ட விசாரணையில், குரங்கை பிடித்த விடியோவை ஒரு மாதத்துக்கு முன் எடுத்ததும், கல்லூரிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் நோக்கில் அண்மையில் அந்த விடியோ வெளியிடப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த வனத்துறையினா், குரங்கை பிடித்து சித்ரவதை செய்த ஜீவா, சின்னதுரை ஆகியோருக்கு தலா ரூ. 20 ஆயிரமும், காவலாளி செந்தில்குமாருக்கு ரூ. 10 ஆயிரமும் என மொத்தம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.