ஏற்றுமதியை அதிகரிக்க முந்திரி வாரியம் அமைக்கப்படுமா?
முந்திரி உற்பத்தி, பதப்படுத்துதல், ஏற்றுமதி அதிகரிக்க முந்திரி வாரியம் அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


முந்திரி உற்பத்தி, பதப்படுத்துதல், ஏற்றுமதி அதிகரிக்க முந்திரி வாரியம் அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் விளையும் முந்திரியை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து உள்பட 60க்கும் அதிகமான நாடுகள் இறக்குமதி செய்கின்றன.
இந்தியாவில் குறிப்பாக தமிழகம், கேரளத்தில் அதிகளவில் முந்திரி விளைவிக்கப்படுவதோடு, இந்த முந்திரியில் சுவை, தரம் அதிகம் என்பதால் வெளிநாட்டினர் அதிகளவில் விரும்புகின்றனர். அதேபோல, முந்திரியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஓடுகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் (இஹள்ட்ங்ஜ்ய்ன்ற் ள்ட்ங்ப்ப் ப்ண்வ்ன்ண்க்) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.
முந்திரி ஏற்றுமதி புரமோஷனல் கவுன்ஷில் (பட்ங் இஹள்ட்ங்ஜ் உஷ்ல்ர்ழ்ற் டழ்ர்ம்ர்ற்ண்ர்ய் இர்ன்ய்ஸ்ரீண்ப் ர்ச் ஐய்க்ண்ஹ) கேரளாவில் தான் இயங்கி வருகிறது. அம்மாநிலத்தில் உற்பத்தி, பதப்படுத்துதல் தொழிலை மேம்படுத்த முந்திரி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இது போன்ற வாரியம் இல்லாததால், முந்திரி விவசாயிகள் தங்களது தொழிலை மேம்படுத்த முடியாமல் உள்ளனர்.
தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது.
இதில், முந்திரி கொட்டையை உடைத்து பதப்படுத்தி தரம் பிரிக்கும் சிறு நிறுவனங்கள் 400க்கும் அதிகமாக உள்ளன. முந்திரி பயிர் ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் பூ விட்டு பங்குனி, சித்திரை மாதம் அறுவடைக்கு தயாராகி விடும். மேற்கண்ட மாவட்டங்களில் 30 ஆண்டுக்கு முன்பு வைக்கப்பட்ட முந்திரி மரங்கள் மட்டுமே இருக்கின்றன.
கடந்த இரு முறை ஏற்பட்ட புயலால் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள முந்திரி மரங்களில் காய்ப்புத் தன்மை குறைந்து விட்டன. முந்திரி காய்ப்பு தன்மை அதிகம் கொண்ட வி.ஆர்.ஐ.2 ஒட்டுரக கன்றுகள் போதிய அளவு தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை.
தமிழகத்திலுள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த முந்திரி கொட்டையை திறந்தவெளி களத்தில் 3 நாள்கள் சூரிய வெளிச்சத்தில் காய வைத்து கொதி கலனில் அவிழ்த்து தொழிலாளர்களால் பதமாக உடைக்கப்படுகிறது.
பின்னர், சூடான அறையில் 70 டிகிரி வெப்பத்தில் பதப்படுத்தி, முந்திரியில் சிகப்பு தோல் நீக்கம் செய்து, ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு மீண்டும் 70 டிகிரி வெப்பத்தில் பதப்படுத்தி கெடாமல் பாதுகாக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
ஆனால் தற்போது முந்திரி தொழிலில் முதலீடு அதிகமாகவும், லாபம் குறைவாக இருப்பதால் விவசாயிகள் பலர் முந்திரி தொழிலில் போதிய ஆர்வம் இல்லாமல் உள்ளனர். முந்திரி உற்பத்தி, பதப்படுத்துதல், ஏற்றுமதியை அதிகரிக்க முந்திரி தொழில் வாரியம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டும் அரசு கண்டு கொள்ளவில்லை. ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முந்திரித் தொழிலை மேம்படுத்த வாரியம் அமைக்க அரசை, மக்கள் பிரதிநிதிகள் நிர்பந்திக்க வேண்டும் என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...