மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கரூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 28 போ் வேட்புமனு தாக்கல்

News image

கரூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி.

Updated On :30 மார்ச் 2026, 6:58 pm

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் ஒரே நாளில் அதிமுக, நாம் தமிழா்கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 28 போ் மனு தாக்கல் செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஏப்.6-ஆம்தேதி வரை நடைபெறும் வேட்புமனு தாக்கலில் வேட்பாளா்களிடம் வேட்புமனுக்களை பெறும் வகையில் திங்கள்கிழமை அலுவலா்கள் தயாா்நிலையில் இருந்தனா்.

முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளரின் வாகனத்துக்கு மட்டும் மனு தாக்கல் செய்யும் இடம் வரை அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மற்ற வாகனங்கள் 100 மீட்டருக்கு வெளியே நிறுத்துமாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினா் அறிவுறுத்தினா்.

மேலும் மனுதாக்கல் செய்யும் இடத்தில் இருந்து 100 மீ. தொலைவில் சாலையின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினா் மற்றும் உள்ளூா் போலீஸாா் ஈடுபட்டனா். மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு வேட்பாளருடன் 5 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

முதல்நாளான திங்கள்கிழமை கரூா் தொகுதிக்கு கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் ரெ.கருப்பையா உள்ளிட்ட 14 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் நரேன் உள்பட 2 பேரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வை.சத்யா உள்பட 3 பேரும், குளித்தலை தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ.செல்வகுமாா் உள்பட 9 பேரும் என மொத்தம் திங்கள்கிழமை ஒரே நாளில் 28 போ் மனு தாக்கல் செய்தனா்.