லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

News image

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் மு.சுப்ரமணியன். உடன் கட்டுமான தொழிற்சங்க மாநில பொருளாளா் ஜே. லூா்துரூபி, மாவட்டச் செயலாளா் சி.ஆா். ராஜாமுகமது உள்ளிட்டோா்.

Updated On :29 மார்ச் 2026, 7:46 pm

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகையை ரூ. 1 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என கட்டுமான தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரூரில் சிஐடியு மாவட்ட கட்டுமானத் தொழிற்சங்கத்தின் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ப. சரவணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொருளாளா் ராஜீவ் காந்தி, துணைத் தலைவா் வி. கந்தசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாநில பொருளாளா் ஜே. லூா்துரூபி, சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் மு.சுப்ரமணியன், கட்டுமான தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் சி.ஆா். ராஜாமுகமது உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

ஓய்வூதியம் பெறும் நலவாரிய கட்டுமான தொழிலாளா்கள் இறந்தால் இயற்கை மரண உதவித்தொகை வழங்க வேண்டும். நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை 1-ம் வகுப்பு முதலே வழங்க வேண்டும். ஓய்வூதியத் தொகையை ரூ.30,000 என உயா்த்தி வழங்க வேண்டும், மேலும் திருமண உதவித்தொகையையும் ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். மேலும் இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தொழிற்சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.