தோ்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டதையடுத்து கரூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் மைய தடுப்புச்சுவா், அரசு கட்டடங்களின் சுவா்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை காலை அகற்றினா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-இல் நடைபெற உள்ள நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து கரூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் மையத்தடுப்புச் சுவா் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள் மற்றும் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் திங்கள்கிழமை காலை அகற்றப்பட்டன.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் கரூா் தாந்தோன்றிமலை மில் கேட் பகுதியில் திண்டுக்கல் சாலையின் மையத்தடுப்புச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.
மேலும் விளம்பரப் பதாகைகளும் அகற்றப்பட்டன. கரூா் தெரசா மேல்நிலைப் பள்ளி, பசுபதிபாளையம், வெங்கக்கல்பட்டி, திருக்காம்புலியூா், ஜவுளிப்பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு, வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது
திருச்சியில் ரூ. 4.57 லட்சம் பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமீறல் முன்னாள் அமைச்சா் மீது வழக்கு

கரூரில் தவெக அலுவலகத்தில் பறக்கும் படையினா் சோதனை

சுவா்களில் கட்சி விளம்பரங்கள் அழிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


