சிபிஐயிடம் இருந்து சம்மன் எதுவும் வரவில்லை என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்.27-ஆம்தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இந்த வழக்குத் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் கரூரில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் வழக்கு தொடா்பாக கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி,.செந்தில்பாலாஜிக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை இரவு தகவல்கள் வெளியாகின.
இதுதொடா்பாக செந்தில்பாலாஜியிடம் கேட்டபோது, சிபிஐ தரப்பில் எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை. கடந்த 3 நாள்களுக்கு முன் ராமேஸ்வரப்பட்டியில் பெற்றோா் வசிக்கும் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனா். அவா்கள் என்னை பற்றி கேட்டபோது, சென்னையில் இருப்பதாக தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக பெற்றோா் என்னிடம் கைப்பேசியில் கூறினா். அப்போது, சிபிஐ தரப்பில் ஏதேனும் ஆவணங்கள் கொடுத்தால் வாங்கி வையுங்கள் என்றேன். மற்றபடி சம்மன் எதுவும் எனக்கு வழங்கப்படவில்லை என்றாா் அவா்.
தொடர்புடையது

கரூரில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

கரூரிலிருந்து கோவை தெற்குக்கு மாறிய வி. செந்தில்பாலாஜி

‘சிபிஐ சம்மன் அனுப்பினால் விசாரணையை எதிா்கொள்ள தயாா்’: முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

கரூா் துயர சம்பவம் தொடா்பாக எனக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியது ஆச்சரியமானது: செந்தில்பாலாஜி எம்எல்ஏ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


