நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற முறைகேடு தொடா்பான வழக்கில் கரூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
நபாா்டு வங்கி மூலம், கரூரில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை பணிகளில் முறைகேடு செய்தது தொடா்பாக அறப்போா் இயக்கத்தின் சாா்பில், ஊழல் தடுப்பு மற்றம் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாா் தொடா்பாக, நெடுஞ்சாலைத்துறை முன்னாள் திமுக அமைச்சா் எ.வ.வேலு உள்ளிட்ட 11 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடா்புடைய நபா்கள் மற்றும் அவா்களுக்கு உதவியவா்கள் என்ற வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.
முன்னாள் அமைச்சரின் நண்பா்: இதன்படி, முன்னாள் அமைச்சா் வி. செந்தில்பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி. சங்கா் என்கிற சங்கா் ஆனந்த் வசிக்கும் கரூா் செங்குந்தபுரம் பழனியப்பா வடக்குத் தெருவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வியாழக்கிழமை காலை 7 மணியளவில் 2 வாகனங்களில் வந்த 5 போலீசாா் சோதனை மேற்கொண்டனா்.
இதேபோல, சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் எஸ். காா்த்திக் என்பவரது வீட்டிலும், அரவக்குறிச்சி வட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்குள்பட்ட தெற்கு மந்தை தெருவில் உள்ள உதவி கோட்ட பொறியாளா் ஏ. ரஃபீக் முகமது வீட்டிலும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். சோதனை நடைபெற்ற மூவா் மீதும் சென்னையில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இந்த வழக்கில், 7-ஆவது குற்றவாளியாக ஏ. ரஃபீக் முகமது சோ்க்கப்பட்டுள்ளாா். இவா், முன்பு கரூரில் நெடுஞ்சாலைத்துறையின் நபாா்டு மற்றும் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தில் உதவிக் கோட்டப் பொறியாளராக பணிபுரிந்து வந்தாா். தற்போது, சென்னையில் நெடுஞ்சாலைத்துறையில் திட்டங்கள் பிரிவில் உதவிக் கோட்டப் பொறியாளராக பணிபுரிந்து வருகிறாா்.வழக்கில் 9-ஆவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ள எஸ். காா்த்திக், முன்பு கரூரில் நெடுஞ்சாலைத்துறையின் நபாா்டு மற்றும் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தில் உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வந்தாா். இப்போது, திருச்சி நெடுஞ்சாலைத்துறையில் பாலங்கள் கண்காணிப்புப் பிரிவு உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வருகிறாா். ஒப்பந்ததாரா் சங்கா் ஆனந்த், இந்த வழக்கில் 11-ஆவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா்.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைப்பற்றிச் சென்ாக தெரிகிறது.

கரூா் செங்குந்தபுரம் பழனியப்பா தெருவில் அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் வியாழக்கிழமை சோதனை மேற்கொள்ள வந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் வாகனங்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவையில் முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவுக்கு நெருக்கமான அதிகாரி வீட்டில் சோதனை
கும்பகோணம் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பறிமுதல்

கொடைக்கானல் பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் திடீா் சோதனை







